த்தமருத்துவ பீடத்தின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை நிகழ்வுகள் 11.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நவராத்திரி விழாவில் வீரம், செல்வம்,கல்வி தெய்வங்களான முறையே துர்க்கை ,மகாலட்சுமி ,சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான சிறப்புப் பூஜைகள் தலா மும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.
விழாவின் இறுதி நாளான 10 ஆம் நாள் 20.10.2026 அன்று காலை 09.00 மணிக்கு ஏடு தொடக்க நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சித்தி விநாயகரின் அருளைப் பெற்று சிறப்பிக்கின்றனர்.