சித்த மருத்துவப் பீடத்தின் பாரம்பரிய மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க சங்காபிஷேக விழா கடந்த 13.09.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பீடாதிபதி , விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். பீடத்தின் நல்வாழ்வு, கல்விச் சிறப்பு மற்றும் மாணவர்களின் எதிர்கால வெற்றி ஆகியவற்றிற்காக வேண்டி சிறப்பு வழிபாடுகளும் சங்க அபிஷேகமும் நடைபெற்றன. பீடத்தின் கலாச்சார ஒருமைப்பாட்டையும், அனைவரின் கூட்டு முயற்சியையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, சித்த மருத்துவக் குடும்பத்தினர் இடையே ஒரு புதிய புத்துணர்ச்சியையும் ஆன்மீக அமைதியையும் ஏற்படுத்தியது.