Faculty of Siddha Medicine

2022

பொங்கல் விழா

24ம் திகதி அன்று தைத்திருநாளை முன்னிட்டு எமது சித்த மருத்துவ அலகில் இடம்பெற்றது. இதன்போது பொங்கல் பொங்கியதுடன் பாரம்பரிய விளையாட்டுக்களான உறி அடித்தல், சங்கீத கதிரை போன்ற விளையாட்டுக்களும் இடம் பெற்றன.

சித்த மருத்துவ இதழ் வெளியீடு
02 ம் திகதி புதன் கிழமை அன்று எமது சித்த மருத்துவ அலகில் மாலை 4.30 மணியளவில் 2017/2018 மாணவர் ஒன்றியத்திற்கான சித்த மருத்துவ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிவராத்திரி
சிவராத்திரி பூசை வழிபாடுகள் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்ச் 01 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித்திங்கள் வழிபாடுகள்
ஏப்ரல் 11 திங்கட்கிழமை அன்று காலை மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலில் இறுதி பங்குனித்திங்கள் வழிபாடுகள் இடம்பெற்றன

பேராசிரியர் திரு. சந்திரசேகரம்பிள்ளை பாலகுமார் அவர்களின் அஞ்சலிக்கூட்டம்.
ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இயற்கை எய்திய உயிரிரசாயனவியல் பேராசிரியர் திரு. சந்திரசேகரம்பிள்ளை பாலகுமார் அவர்களின் அஞ்சலிக்கூட்டம் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஹ_வர் அரங்கில் இடம்பெற்றது.

இப்தார் நிகழ்வுகள்
ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நிகழ்வுகள் சித்த மருத்துவ அலகின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

சித்த மருத்துவ இதழ் வெளியீடு
ஜூலை மாதம் 21ம் திகதி வியாழக்கிழமை அன்று, மாலை 3 மணியளவில், சித்த மருத்துவ அலகு கேட்போர்கூடத்தில், சித்த மருத்துவ இதழ் 2019/2020 ஆனது, இலத்திரனியல் நூல் (e-book) ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர். சி.சிறிசற்குணராசா அவர்களினால் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.

நவராத்திரி விழா

26.09.2022-05.10.2022 நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. 04.12.2022 வாணி விழாவை முன்னிட்டு அணிகளுக்கு இடையிலான கோலம் போடுதல் போட்டி இடம்பெற்றது. 05.10.2022 நவராத்திரி விழாவின் இறுதி நாள் பூஜை நிகழ்வுகள்இ கலை நிகழ்வுகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இரத்த தான முகாம்

10.11.2022 யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவிய குருதி தட்டுப்பாடு காரணமாக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இடம்பெற்றது.


மென்பந்து கிரிக்கெட் போட்டி

04.12.2022 ஒவ்வொரு அணிகளுக்கு இடையிலான மென் பந்து கிரிக்கெட் போட்டி நபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.


கார்த்திகை தீபம்

06.12.2022 அன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சித்த மருத்துவ அலகில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

அகஸ்தியர் தினம்

09.12.2022, 30.12.2022 அன்று அகஸ்தியரின் ஜனன தினத்தை முன்னிட்டு 2ம்இ 3ம் வருட மாணவர்களால் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.


ஒளி விழா

12.12.2022இ 14.12.2022 ஒளி விழாவை முன்னிட்டு Christmas card அமைத்தல், Christmas tree அமைத்தல் போட்டிகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன. 16.12.2022 ஒளி விழா நிகழ்வுகள்இ கலை நிகழ்வுகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

SMSA Services

SMSA provided gas cylinders to the students during the Gas crisis period (August 2022) and Petrol. Donated a First Aid Box to Unit of Siddha medicine.