Faculty of Siddha Medicine

Oli vila

டிசம்பர் 25ம் திகதி பாலகர் இயேசு பிறப்பிற்காக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் ஒளிவிழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் 2023.12.12 அன்று “Christmas Card Making” போட்டியும் 2023.12.14 அன்று “Christmas Tree Making” போட்டியும் 2023.12.15 அன்று “Carol Song Competition” போட்டியும் நாடாத்தப்பட்டன.இப்போட்டிகளுக்குரிய வெற்றியாளர்கள் நடுவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 2023.12.15 அன்று ஒளிவிழாவிற்கான கலாச்சார நிகழ்வுகள் மாலை 4.30 மணியளவில் சித்த மருத்துவ அலகின் கேட்போர்கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Rev.Fr.S.Arul Sutharson OMI அவர்களும் துறைத்தலைவர், பெரும்பொருளாளர், மாணவர் ஆலோசகர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், செயன்முறை வழிகாட்டுனர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.