Faculty of Siddha Medicine

பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல்

1/4/2024 திங்கட்கிழமை அன்று பங்குனித் திங்களினை முன்னிட்டு சித்த மருத்துவ அலகினால் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலில் பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 9 மணியளவில் பொங்கல் பொங்கும் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சித்த மருத்துவ மாணவர்கள் , விரிவுரையாளர்கள்,செயன்முறை வழிகாட்டுநர்கள் மற்றும் உதவி வரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

11.30 மணியளவில் பொங்கல் நிகழ்வுகள் முடிவடைந்தவுடன், ஆலயத்தில் படையல் வைத்து அனைவரும் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் மதியம் 12 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.