Faculty of Siddha Medicine

நீரிழிவு முகாம்

2024.04.20 ஆம் திகதி சனிக்கிழமையன்று யாழ் நீரிழிவு கழகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய நீரிழிவு முகாமும் விழிப்புணர்வு செயலமர்வானது யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் ஆலயத்தில் காலை 9 மணி
ஆரம்பமானது. இந் நிகழ்வில் பொதுமக்களுக்கான மருத்துவ முகம். கண் பரிசோதனை, பற்சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை மற்றும் யோக பயிற்சிகள் இடம்பெற்ற நிலையில் சித்த மருத்துவ அலகிற்கு “நீரிழிவில் மூலிகைகளின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் குறித்த இடம் வழங்கப்பட் டிருந்தது. எனவே இந்நிகழ்வில் 4ம் வருட மாணவர்களால் சிறுதானியங்கள் பற்றியும் 2ம் வருட மாணவர்களால் மூலிகைப்பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட இந் நிகழ்வில் சுமார் 60 இற்கும். மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய் நிலைமையில் பயன்படுத்த கூடிய மூலிகைகளில் முக்கியமான 32 மூலிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம் மூலிகை தாவரங்கள் மற்றும் அம் மூலிகையில் நிரிழிவிற்கு பயன்படுத்தும், உலர் தாவர பொருட்களும் பெயர் பதாகைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு இலகுவாக பயன்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் வழங்கப்பட் டதோடு இம் முலிகைகள் குறித்து நவீன கால ஆராய்ச்சிகளின் தகவல்களும் வழங்கப்பட்டது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இவ மூலிகைகளை உணவாக எடுக்கும் முறைகள், குறிப்பாக இலை வகைகளாக பயன்படுத்த கூடியவை, காய்கறிகளாக சமைக்க கூடியலை தேநீர், பானங்கள் கஷாயமாாக அருந்த கூடியை அம்மூலிகைகளின் அவர்களுக்கு விளங்கும் வகையில் மூலிகைகளின் வீட்டு பாவணை முறைகள குறித்தும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது. மேற்குறித்த நிகழ்வை ஒழுங்குப்படுத்துவதற்கும் நிகழ்வை சிறந்த வகையில் நடாத்துவதட்க்கும் சித்த மருத்துவ விரிவுரையாளர் துணை விரிவுரையாளர்கள் மற்றும் செயன்முறை வழிகாட்டுனர்களின்
பங்கு பெரும் பக்கபலமாய் அமைந்தது.